Lyricist Vairamuthu

முதல் கனவே பாடல் வரிகள்

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் 
நீ மறுபடி ஏன் வந்தாய்

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் 
நீ மறுபடி ஏன் வந்தாய் 
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா 
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா 
கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா 
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் 
நீ மறுபடி ஏன் வந்தாய் 

விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா 
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி 
ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்

இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்

தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் 
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய்
இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் 
நீ மறுபடி ஏன் வந்தாய் 

விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா 
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம் ஓசையோடு
நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு

கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு

நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை 
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை 
வன்ன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை 
வர சொல்லு தென்றலை

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே 
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் 
அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்

சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் 

மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல் எழுப்புவாய். நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்…

Movie: Majunu
Lyrics: Vairamuthu
Music: Harris Jayaraj

Leave a Reply