Kaadhal Vandhadhum Song Lyrics in Tamil
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை..
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை..
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
தன்னனனானன தன்னனனானன தன்னனனானன
தன்னனனானன..
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
ஆஆஆஆ…………
தூங்காத காற்றே துணை தேடி ஓடி என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா..
நில்லாத காற்று சொல்லாது தோழி நீயாக உந்தன் காதல் சொல்வாயா
உள்ளே எண்ணம் அரும்பானது உன்னால் இன்று ருதுவானது
நான் அதை சோதிக்கும் நாள் வந்தது தன்னனனானன
தன்னனனானன தன்னனனானன தன்னனனானன தன்னனனானன
தன்னனனானன தன்னனனானன
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்
உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்
நீ வந்து போனால் என் வீடு எங்கும்
உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்
கனா வந்தால் மெய் சொல்கிறாய் கண்ணில் வந்தால் பொய் சொல்கிறாய்
போ என்னும் வார்த்தையால் வாவென்கிறாய்
தன்னனனானன தன்னனனானன தன்னனனானன
தன்னனனானன தன்னனனானன தன்னனனானன
தன்னனனானன தன்னனனானன
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு சென்றால் வரமாட்டாய்
அது தானே பெரும்பாடு தன்னனனானன தன்னனனானன
தன்னனனானன தன்னனனானன...
Movie: Poovellam Un Vasam
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar
0 Comments