Azhagho Azhaghu Song Lyrics in Tamil - அழகோ அழகு

Azhagho Azhaghu Song Lyrics in Tamil

Lyricist Na. Muthu Kumar

அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள் நடையழகு பத்தி எரியும் அவள் உடையழகு
அய்யய்யோ சிக் என நடக்கும் அய்யய்யோ
ஓவியம் அவளோ அய்யய்யோ சக்கரை தடவி அய்யய்யோ
செஞ்சது உடலோ அழகோ அழகு அழகோ அழகு

எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ என்று என்னை வியக்கும் இதழ் அழகு 
அந்தியிலே வானம் சிவந்ததை போலே 
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு

மெல்லிடையை பற்றி சொன்னால் நில்லாத அழகு 
மேலே கொஞ்சம் பார்க்க சொன்னால் பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை என்ன சொல்ல ஓ..

காட்டருவி போலே அலை அலையாக கண்டபடி ஓடும் குழல் அழகு 
கண்ணில் ரெண்டு வலையை பிண்ணி பிண்ணி வீசி 
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு

தெற்றுப் பல்லில் சிரிக்கையில் தீராத அழகு 
தள்ளி நின்று யோசிக்கையில் வேறேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை என்ன சொல்ல ஓ..
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ...


Movie: Samar
Lyrics: Na. Muthu Kumar 
Music: Yuvan Shankar Raja

Post a Comment

0 Comments