Aagaya Suriyanai Song Lyrics in Tamil
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்
என் எண்ணம் எதுவோ கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம்
கொத்தி தின்னும் கிளி நான் உன்னை கொஞ்சும் என்னமோ
ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே
என்னை கொல்லும் என்னமோ
காதல் பந்தியில் நாமே உணவுதான் உண்ணும் பொருளே
உன்னை உண்ணும் விந்தை இங்கேதான்
காதல் பார்வையில் பூமி வேறு தான் மார்கழி
வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கேதான்
உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகம் தா உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்கம் வந்தது
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்
டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கி நான் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொல்வேனே
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி
நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி
கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்
பாரம் குறைந்தது ஏதோ நிம்மதி
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளியே என்னை கொல்லும் என்னமோ...
Movie: Samurai
Lyrics: Vairamuthu
Music: Harris Jayaraj
0 Comments