Yeh Nenje Songs Lyrics in Tamil
ஏ நெஞ்சே என் நெஞ்சே என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
ஏ நெஞ்சே என் நெஞ்சே என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
ஹே ஹே ஹே காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்
ம்ம் ம்ம் ம்ம் ஈர்க்கும் அதன் திசையில் இன்று வீழ்ந்தேன் நான்
மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு சில்லென்று மலரை தொடுதே
ஏ நெஞ்சே என் நெஞ்சே என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
என் நிலவில் மாற்றம் எதிலும் தடுமாற்றம்
பார்வை பரிமாற்றம் ஒரு ஆனந்த ஏக்கம்
கண்ணை விட்டு வெளியே காணும் ஒரு கனவே
வரைந்து அழைத்தாலும் இனி வாராது தூக்கம்
வெகு நேரம் பேசி பின்பு விடை பெற்று போகும் நேரம்
நாள் அடிகள் நடக்கும் கால்கள் நடை மறந்து திரும்பும் ஏனோ
பேசாத நேரம் தானே பெரிதாக தோணும் அன்பே
காலங்கள் தோற்க்கும் இங்கே
ஏ நெஞ்சே என் நெஞ்சே என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
நேற்று வரும் கனவில் நிலவு வரவில்லை
அடம்பிடிக்கும் நிலவை இனி நான் என்று பார்ப்பேன்
காதல் வரும்போது கனவுகளும் மாறும் நீ விரும்பும் நிலவை
இனி தினம் தோறும் பார்ப்பாய்
யார் யாரோ எழுதி சென்ற புரியாத கவிதை எல்லாம்
நான் கேட்டு ரசித்தேன் இன்று
நான் பார்த்த மரமும் இலையும் புது போர்வை போர்த்தி கொண்டு
புது பார்வை பார்த்துக்கொண்டு நம்மை பார்த்து சிரிக்கின்றதே
ஏ நெஞ்சே என் நெஞ்சே என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
ஓ ஓ ஓ காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்
ம்ம் ம்ம் ம்ம் ஈர்க்கும் அதன் திசையில் இன்று வீழ்ந்தேன் நான்
மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு சில்லென்று மலரை தொடுதே
ஏ நெஞ்சே என் நெஞ்சே என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்...
Movie: April Maadhathil
Lyrics: Thamarai
Music: Yuvan Shankar Raja
0 Comments