Vetri Kodi Kattu Song Lyrics in Tamil – வெற்றி கொடி கட்டு

Vetri Kodi Kattu Song Lyrics in Tamil

Lyricist Vairamuthu

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்ல அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்ல அப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்ல அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்ல அப்பா

வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா

கைதட்டும் உளிபட்டு நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா

வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா

மிக்கத் துணிவுண்டு இளைஞர்கள் பக்கத் துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு முடிவெடு படையப்பா

இன்னோர் உயிரை கொன்று புசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரை கொன்று ரசிப்பவன் அரக்கனடா

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்

நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா

வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா

கைதட்டும் உளிபட்டு நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா

வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா
வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா

மிக்கத் துணிவுண்டு இளைஞர்கள் பக்கத் துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு முடிவெடு படையப்பா

நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா

வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா...

Movie: Padayappa
Lyrics: Vairamuthu
Music: A.R. Rahman

Post a Comment

0 Comments