Sahaayane Song Lyrics in Tamil
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்க என் கண்ணங்கள் பூக்க
நீ வயதுக்கு வாசம் தந்தாய்
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே பசி இன்றி போவதென்ன
பலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல்
விழி ரெண்டும் கேட்பதென்ன
தவறி விழுந்த பொருள்போல் என்னை எடுத்தாயடா
தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா..
பிள்ளை போல் என்னை கையில் ஏந்து
எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து
சகாயனே சகாயனே...
கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம்
எனக்குள்ளே கூச்சல் போட
இதுவரை கேட்காத இசை என உன் பேச்சு
அளவில்லா ஆட்டம் போட
இறந்து இறந்து பிறக்கும் நிலை இதுதானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் குடுத்தாயடா
கள்ள பார்வை என்னை கொத்தி தின்ன
என்ன ஏது என்று உள்ளம் என்ன என்ன
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்...
Movie: Saattai
Lyrics: Yuga bharathi
Music: D. Imman
0 Comments