Azhagaana Sooriyan Song Lyrics in Tamil
ஆஹா அழகான சூரியன் கண்ணால் பேச
அலங்கார வெண்ணிலா கைகள் சேர
புல்லாங்குழல் மீண்டுமே பாடுதே
என் நன்றியே பாடலாய் ஆனதே
அழகான சூரியன் கண்ணால் பேச
அலங்கார வெண்ணிலா கைகள் சேர
மின்சாரம் பூ பூக்குமா பூத்ததே
உன்னாலேதான் என் குரல் பாடுதே
அழகான சூரியன் கண்ணால் பேச
அலங்கார வெண்ணிலா கைகள் சேர
ஆஹா ஆஆ ஹா ஆஆ
ரோஜா பூவின் மென்மை எல்லாம் உந்தன் மனம்தானே
காலை பனியின் தூய்மை எல்லாம் உந்தன் குணம்தானே
உன்னாலே இசை என்னும் நீர்வீழ்ச்சி
உன்னாலே எந்தன் வாழ்வில் மலர்காட்சி
உன் பாச கைகளில் பூ பூக்க பூந்தோட்டமாய் அவள் வந்தாள்
உன் கோவில் நெஞ்சிலே வாசம் செய்ய காதல் தீபமாய் நின்றாள்
மூங்கில்கள் என்பது தென்றலாய் பாடுது
மேகங்கள் என்பது தூரலாய் பாடுது
எனக்குள்ளே பாட்டு சத்தம் நீ செய்தாய்
இதயத்தில் நாடி சத்தம் நீ தந்தாய்
நன்றி சொல்ல வார்த்தை இன்றி நானும் பாடினேன்
பாட்டுக்குள்ளே பூக்கள் அள்ளி உன் மேல் தூவினேன்
அழகான சூரியன் கண்ணால் பேச
அலங்கார வெண்ணிலா கைகள் சேர...
Movie: Manadhai Thirudivittai
Lyrics: Pa. Vijay
Music: Yuvan Shankar Raja
0 Comments