Ayyayo En Usurukulla Song Lyrics in Tamil
ஏலே ஏலேலேலே ஏலே ஏலேலேலே ஒத்த பனை மரத்துல செத்த நேரம்
உன் மடியில் தல வச்சு சாஞ்சிக்கிறேன் சங்கதிய
சொல்லி தாறேன் வாடி நீ வாடி
பத்துக்கண்ணு பாலத்துல மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்
பாய்ச்சலோட வாடி புள்ள கூச்சம் கீச்சம் தேவையில்லை
வாடி நீ வாடி..
ஏலே ஏலேலேலே ஏலே ஏலேலேலே செவ்வளனி சின்னக் கனி..
உன்ன சிறை எடுக்கப் போறேன் வாடி..
அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான் அய்யய்யோ
என் மனசுக்குள்ள நோயத் தச்சான் அய்யய்யோ
சண்டாளி உன் பாசத்தால நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னாக்கூட குத்தமில்ல நீ சொன்னா
சாகும் இந்தப் புள்ள அய்யய்யோ என் வெட்கம்
பத்தி வேகுறதே அய்யய்யோ
என் சமஞ்ச தேகம் சாயிறதே'அய்யய்யோ
அரளி விதை வாசக்காரி ஆள கொல்லும் பாசக்காரி
என் உடம்பு நெஞ்ச கீறி நீ உள்ள வந்தா கெட்டிக்காரி
அய்யய்யோ என் இடுப்பு வேட்டி இறங்கிப் போச்சே அய்யய்யோ
என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே அய்யய்யோ
கல்லுக்குள்ள தேர போல கலைஞ்சிருக்கும்
தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா
காலச் சுத்தும் நிழலப் போல
பொட்டக்காட்டில் உன்கூடவே தங்கிடவா ஓஒஓஒஓஒ....
அய்யானார பாத்தாலே உன் நெனப்புதான்டா
அம்மிக்கல்லு பூப்போல மாறிப்போச்சு ஏன்டா
நான் வாடாமல்லி நீ போடா அல்லி
தொரட்டிக் கண்ணு கருவாச்சியே
நீ தொட்டா அருவா கரும்பாகுதே
தொரட்டிக் கண்ணு கருவாச்சியே
நீ தொட்டா அருவா கரும்பாகுதே
சண்டாளி உன் பாசத்தாலநானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னாக்கூட குத்தமில்ல நீ சொன்னாசாகும் இந்தப் புள்ள...
Movie: Paruthiveeran
Lyrics:Snehan
Music: Yuvan Shankar Raja
0 Comments