Kaadhal Vandhaal Song Lyrics in Tamil
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்
உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு
சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணில்
பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நான் கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி
காதல் வந்தால் சொல்லி அனுப்பு காதல் வந்தால் சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு...
Movie: Iyarkai
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar
0 Comments