Enge Poveno Song Lyrics in Tamil
எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ என் இதயத்தை வாங்கிவிட்டாய்
எங்கே போவேனோ என் கண்ணை கீறிவிட்டாய்
எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்
கூண்டுக்குள் இருக்கும் பறவை நான்
என் கண்ணிலே ஒரு துண்டு வானம் நீதானடி
எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்
தெய்வங்கள் இங்கே இல்லை இருந்தாலும் இரக்கம் இல்லை
கழுத்தோடு கல்லை கட்டி கடலோடு போட்டாள் என்னை
மரணத்தை தானா இந்த காதலும் கேட்குது
பொய் வேஷமே உள்ளதே எங்கும்
இல்லாமை தானா இங்கு காதலை மாய்ப்பது
என் சூழ்நிலை கொல்லுதே
எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்...
Movie: Angadi Theru
Lyrics: Na. Muthu Kumar
Music: Vijay Antony
0 Comments