Yaar Intha Devathai Song Lyrics in Tamil
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
பனிகூட உன்மேல் படும் வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர்கூட உன்னை தொடும் வேளையில்
பூவென்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்
அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்
அன்பே உன் பேரை படகெங்கிறேன்
அதை சொல்லிதானே கரையை சேர்கிறேன்
உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன்
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை...
Movie: Unnai Ninaithu
Lyrics: Pa. Vijay
Music: Sirpy
0 Comments