Vetti Veru Vasam Song Lyrics in Tamil - வெட்டி வேரு வாசம்

Vetti Veru Vasam Song Lyrics in Tamil

Lyricist Vairamuthu

வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் 
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் 
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு

வேருக்கு வாசம் வந்ததுண்டோ.. மானே 
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்

பச்ச கிளியோ ஓஹோ போட்டுக்கிருச்சு
இச்ச கிளியோ ஓஹோ ஒத்துகிருச்சு
பச்ச நெருப்பு பத்திகிருச்சு பச்ச மனசு பத்திகிருச்சு

கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது

சாமி கிட்ட கேளு யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வெச்சு சுத்தி வச்சவக யாரு

வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் 
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு

வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்

உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன்
கண்ணுக்குள்ள நான் தண்ணி வெக்கிறேன்

சொல்லாம தான் தத்தளிக்கிறேன்
தாளாம தான் தள்ளி நிக்கிறேன்

பாசம் உள்ள பந்தம் இது பாவமுன்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்க கூடாது

புத்தி கெட்ட தேசம் பொடி வெச்சு பேசும்
சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் 
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் 
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு

வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்...

Movie: Muthal Mariyathai
Lyrics: Vairamuthu
Music: Ilaiyaraaja

Post a Comment

0 Comments