Selaiyila Veedu Song Lyrics in Tamil - சேலையில வீடு

Selaiyila Veedu Song Lyrics in Tamil

Lyricist Palani Bharathi

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க

மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக

சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளி கொடுக்க

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க

தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே
தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே

ஓவியத்தைத் திரை மறைவில் 
ஒளித்துவைப்பதேனம்மா

காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா
ரசிக்க வந்த ரசிகனின் விழிகளை மூடாதே
விழியை மூடும் போதிலும் விரல்களாலே தேடாதே

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஹோ.. ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க

மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்
மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்

முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரங்களே தீர்த்தம் என்று தோணுதே
காலநேரம் என்பது காதலில் இல்லையா

காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க

ஹோ ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா
தென்றல் அடிக்க

மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
ஹா ஆ ஆசொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக்
கோலமொன்று போட

என்னை நான் உன்னிடம் அள்ளி கொடுக்க
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க...

Movie: Aval Varuvala
Lyrics: Palani Bharathi
Music: S. A. Rajkumar

Post a Comment

0 Comments