Raasithan Kai Raasithan Song Lyrics in Tamil - ராசி தான் கை ராசி தான்

Raasithan Kai Raasithan Song Lyrics in Tamil

Lyricist Vaali

ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

ஆத்தாடி உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவ தான் தெரியாதா 
பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல இருப்பவ 
இவ தான் புரியாதா

எந்நாளுமே என் ஆசை மச்சானே உன் கூட தான் நான் இருப்பேன்
உன் துணையாக நல்ல இணையாக என்றும் வாழப் பிறந்தேனே

ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமரன் உனக்கு ஒரு குறையேது
மாமன் இல்லாத பூமியின் மீது எனக்கு ஒரு துணை ஏது

கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ கையோடு அணைச்சேனே 
என் பேரை மறந்து உன் பேரைத்தானே எப்போதும் நினைச்சேனே

பனி பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது பாவை மனம் தானே

ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும் படிக்குது எசப் பாட்டு
ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும் துடிக்குது அதைக் கேட்டு

ஒன்னாக கலந்து சந்தோஷ உறவு எந்நாளும் விலகாது 
கண்ணாடி போலே கல்லால அடிச்சா தண்ணீரும் உடையாது

பட்டு பாய போட்டது பன்னீர் தூவுது பூக்கள் நமக்காக
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

ஆத்தாடி.. உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவன்
இவன் தான் தெரியாதா

பூச்சூடி.. உன் நெனப்புல மிதப்புல இருப்பவன்
இவன் தான் புரியாதா

எந்நாளுமே என் ஆசை மச்சானே
உன் கூடத் தான் நான் இருப்பேன் உன் துணையாக 
நல்ல இணையாக என்றும் வாழப் பிறந்தேனே

ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் 
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்...

Movie: En Aasai Machan
Lyrics: Vaali
Music: Deva

Post a Comment

0 Comments