Puthum Pudhu Kaalai Song Lyrics in Tamil
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசைபாடுது வலி கூடிடும் சுவைகூடுது
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்...
Movie: Megha
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja
0 Comments