Lyricist Na. Muthukumar

பூவனத்தில் மரமுண்டு பாடல் வரிகள்

பூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு பூ நிறைய தேனுண்டு 
பூப்பறிக்கப் போவோமா  பூ மகனே கண்ணே வா

பூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு பூப்பறிக்கப் போவோமா
பூ மகளே பெண்ணே வா

அன்னை மடித்தாலாட்டிலே திண்ணைக்கதை நாம் கேட்டதும்
தந்தை மேலே ஏறிக்கொண்டு அம்பாரிகள் நாம் போனதும்

வெண்டைக்காயின் காம்பைக் கிள்ளி
தங்கக்கம்மல் என்று சொல்லி
தங்கைக் காதில் மாட்டிவிட்டு ரசித்ததுவும்

மொட்டைமாடி வெண்ணிலவில் வட்டமாக நாம் அமர்ந்து
கூட்டாஞ்சோறு கையில் வாங்கி ருசித்ததுவும் எங்கள் வீடுபோல 
இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா…

காற்றில் மரம் ஆடக்கண்டு
வீட்டில் சென்று ஒளிந்தோமன்று
பேய்கள் எல்லாம் பொய்கள் என்று
தந்தை சொல்ல பயமேதின்று

பள்ளிவிட்டுப் பசியுடன் துள்ளித்துள்ளி வீடுவந்து
ஒன்றுமில்லை என்றவுடன் சண்டை போட்டதும்
காய்ச்சல் வந்து படுக்கையில்
சொந்தம் எல்லாம் துடிக்கையில்

அடிக்கடி காய்ச்சல் வரவேண்டிக்கொண்டதும் எங்கள் வீடு போல
இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா…

பூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு பூப்பறிக்கப் போவோமா
பூ மகளே கண்ணே வா…

Movie: Thambi
Lyrics: Na. Muthukumar
Music: Vidyasagar

Leave a Reply