Lyricist Viveka

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பாடல் வரிகள்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா 
அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா

ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற அந்த
வெண்ணிலவை பிடிச்சிருக்கா

கண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன்
என்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா

இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா
மேகம் கூட்டம் மறைஞ்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா

அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி நான் ரசித்தது பிடிச்சிருக்கா
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில் 
நம்ம நனைஞ்சது நெனப்பிருக்கா

திறந்திருக்கிற மனசுக்குள்ளே திருடிச் சென்றது பிடிச்சிருக்கா
வாசம் போக பிடிச்சிருக்கா வாழ்ந்து பார்க்க வழியிருக்கா

அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றும் பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பனிக்காற்றும் பிடிச்சிருக்கு

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு 
அடி கிளியே நீ சொல்லு 
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றும் பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பௌர்ணமியும் பிடிச்சிருக்கு…

Movie: Nee Varuvai Ena
Lyrics: Viveka
Music: S. A. Rajkumar

Leave a Reply