Poongatre Konjam Song Lyrics in Tamil
பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா
மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா
உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா
ஆறுதல் கூறாயோ அருகில் வந்து
பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா
அலைகளாய் ஆடுதே அன்பென்னும் உள்ளங்களே
அனலிலே உருகுதே மெழுகு போல் சொந்தங்களே
பாடிடும் குயில் தோப்பில் யார் அம்பு எய்தார்
வீணையை விறகாக யார் இங்கு காண்பார்
காலமே உன் லீலையே இனி மாறுமோ
பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா
பறவைகள் கூடிடும் வசந்தமாய் ஓர் காலம்
பருவங்கள் மாறினால் பிறந்திடும் ஓர் காலம்
மாலையில் பூத்தாடும் மல்லிகையின் கூட்டம்
மாலையை சேராமல் என்ன இந்த மாற்றம்
ஓவியம் உருவாகுமோ சுவர் இன்றியே
பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா...
Movie: Friends
Lyrics: Palani Bharathi
Music: Ilaiyaraaja
0 Comments