Or Aayiram Yaanai Song Lyrics in Tamil - ஓராயிரம் யானை

Or Aayiram Yaanai Song Lyrics in Tamil

Lyricist Na. Muthukumar

ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே தூண் எல்லாம் இனி தூளாக

ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

குழலோசை இல்லை குயிலோசை இல்லை
இடியோசை ஒன்றே அறிந்தாயே முரணோடு வாழ்ந்து
முள்ளோடு சேர்ந்து அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்

ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதும் இல்லை
வாழ்ந்தாய் தீயின் மடியில்... சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்

ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே தூண் எல்லாம் இனி தூளாக

ஓராயிரம்.. யானை கொன்றால் பரணி ஆதலால்.. 
யுத்தம் இருக்கு கவனி...

Movie: Nandha
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja

Post a Comment

0 Comments