Nee Malara Malara Song Lyrics in Tamil
நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்
ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே உயிரே உயிரே
பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே நீ கூட எனக்கும் ஒரு தாயே..
நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
வாழாமலே வாழ்ந்த நாள் எந்த நாளோ
பார்க்காமல் நாம் இருவரும் இருந்த நாள்
அட காதல் என்பதென்ன இன்ப சிகிச்சை
இது இரண்டுநபர் ஒன்றாய் எழுதும் பரீட்சை
தினம் உன் பேரயே நான் கூறியே உயிர் வாழ்கிறேன்
நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
ம்ம் காற்றோடு நான் ஈரமாய் சேர்கிறேன்
மரமாகி நான் ஈரத்தை ஈர்க்கிறேன்
என் அந்தபுரம் எங்கும் சாரல் அலைகள்
என் நந்தவனம் எல்லாம் ஈர இலைகள்
ஒரு மழையோடு தான் வெயில் சேர்ந்ததே நம் காதலே
நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்
ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே உயிரே உயிரே
பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே
நீ கூட எனக்கும் ஒரு தாயே...
Movie: Arputham
Lyrics: Pa.vijay
Music: Shiva
0 Comments