Muthumani Maala Song Lyrics in Tamil
முத்து மணி மாலை உன்னத் தொட்டுத்
தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு
விட்டுப் போராட
உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே
முத்து மணி மாலை உன்னத் தொட்டுத்
தொட்டுத் தாலாட்ட
கொலுசுதான் மெளனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா
முத்து மணி மாலை என்னத் தொட்டுத்
தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை கொஞ்சம்
விட்டுவிட்டுப் போராட
காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நான்தானே
அத்திமரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற
முத்து மணிமாலை என்னைத் தொட்டுத்
தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை கொஞ்சம்
விட்டுவிட்டுப் போராட
உள்ளத்தில நீ தானே
உத்தமனும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே
ஒரு நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே...
Movie: Chinna Gounder
Lyrics: R. V. Udayakumar
Music: Ilaiyaraaja
0 Comments