Manakkum Sandhaname Song Lyrics in Tamil
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
சின்ன மணிக் கிளியோ சிரிக்கும் நித்தில மணியோ
மஞ்சள் வண்ண நிலவோ மனசில் எத்தனை கனவோ
அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
நந்தன வன குயிலே நடக்கும் சித்திர மயிலே
சின்ன மணி கிளியே சிரிக்கும் நித்தில மணியே
அந்த நாள் மங்கள் நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
தென்மதுரை வீரனுக்கு என்னுடைய மாமனுக்கு
தேக்குமர தேகமடி யம்மா யம்மா
மாமன் கொண்ட பெண் உனக்கு மை எழுதும் கண் எதுக்கு
என்னை வந்து கொல்லுதடி யம்மா யம்மா
ஆத்துல நான் குளிச்சேன் ஆசையா நீ புடிச்சே
தோளத்தான் நீ புடிச்ச சொர்க்கத்த நான் புடிச்சேன்
அடடா ஒரு அங்குலம் அங்குலமாக
நீ ஆசையில் முத்தங்கள் போட
அதை என்னன்னு சொல்லுவேன்
எப்படி சொல்லுவேன் நானே
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
ஓஓ……சின்ன மணிக் கிளியோ சிரிக்கும் நித்தில மணியோ
மஞ்சள் வண்ண நிலவ மனசில் எத்தனை கனவோ
அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
கையளவு சின்ன இடை
சொல்லிக் கொடு என்ன விலை
கேட்ட விலை நான் கொடுப்பேன் கண்ணே கண்ணே
ஆசை அது எவ்வளவு அள்ளிக் கொடு அவ்வளவு
உன் அளவும் என் அளவும் ஒன்னே ஒன்னே
விண்ணிலே வெண்ணிலவு வீட்டிலே பெண்ணிலவு
இன்றுதான் நள்ளிரவு
நான் சொல்லவா நல்வரவு
அடடா இது தண்ணீரில் தாமரை அல்ல
இது பன்னீர் தாமரையம்மா
இந்த தாமரை மொட்டுகள்
பூப்பதென்ன மாமனுக்காக
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
நந்தன வன குயிலே நடக்கும் சித்திர மயிலே
சின்ன மணி கிளியே சிரிக்கும் நித்தில மணியே
அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ...
Movie: Dharma
Lyrics: Pulamaipithan
Music: Ilaiyaraaja
0 Comments