Kovakkara Kiliye Song Lyrics in Tamil - கோவக்காரக்கிளியே

Kovakkara Kiliye Song Lyrics in Tamil

Lyricist Na. Muthukumar

கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே...

கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே...
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...

ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா...

கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே..

ஏ... சூரியகாந்திப்பூவ போல முகத்த திருப்புரியே
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரிஓடுறியே

ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொரத்துறியே

மயிலாப்பூரு மயிலே ஒரு எறகு போடம்மா
என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா

உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல சரிதான் போடிபுள்ள

மேயாத ஆணுமில்ல
மேயாட்டி புல்லுமில்ல சவடால் தேவ இல்ல

ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா..

கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே...

சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே

ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே

ஏய்... பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா
பட்டா நீயும் தந்தா நான் பயிர் எடுப்பேனே

பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..

கண்ணாடி பார்க்கவில்ல
முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா...

ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா...

கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே...

Movie: Vel
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja

Post a Comment

0 Comments