Lyricist Palani Bharathi

காதல் மட்டும் புரிவதில்லை பாடல் வரிகள்

காதல் காதல் காதலில் நெஞ்சம் கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று பட்டாம்பூச்சி ஓடுதடா

எங்கேயோ எங்கேயோ இவனை இவனே தேடுகிறான்
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு தனக்குள் தானே பேசுகிறான்

காதல் மட்டும் புரிவதில்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூர்ச்சை நிலை நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

நேற்று வரைக்கும் இங்கிருந்தேன் இன்று என்னை காணவில்லை 
வெயில் இல்லை மழை இல்லை பார்த்தேனே வானவில்லை

என் நெஞ்சோடு ரசித்தேன் கொல்லாமல் கொல்கின்ற அழகை 
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து வரைந்தேன் அவளை

காதல் மட்டும் புரிவதில்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூர்ச்சை நிலை நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

காதல் காதல் காதலில் நெஞ்சம் கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று பட்டாம்பூச்சி ஓடுதடா

பாலைவனத்தில் நடந்திருந்தேன் நீ வந்து குடை விரித்தாய் 
எந்தன் பெயரே மறந்திருந்தேன் நீ இன்று குரல் கொடுத்தாய்

என் கண்ணாடி மனதில் இப்போது என் முகம் பார்த்தேன் 
நீ வந்த பொழுதில் எந்தன் நெஞ்சம் பூத்தேன்

நதிகள் கடலில் தெரிவதில்லை நட்பில் கவலை புரிவதில்லை
இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால் இரவும் பகலும் பார்ப்பதில்லை

காதல் காதல் காதலில் நெஞ்சம் கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று பட்டாம்பூச்சி ஓடுதடா

எங்கேயோ எங்கேயோ இவனை இவனே தேடுகிறான்
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு தனக்குள் தானே பேசுகிறான்

காதல் மட்டும் புரிவதில்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூர்ச்சை நிலை நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

Movie: Kaadhal Kondein
Lyrics: Pazhani Bharathi
Music: Yuvan Shankar Raja

Leave a Reply