Azhagaana Mancha Pura Song Lyrics in Tamil
அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள் ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள் ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா ஓஹ்ஹோ
மாமன் அவன் இரு தோள்களிலே மஞ்சள் மயில் சாய்ந்திருப்பாள்
நீல விழி பூத்திருப்பாள் நிம்மதியாய் பார்த்திருப்பாள்
வீட்டை நல்ல ஒரு கோயிலென வஞ்சி மகள் ஆக்கி வைத்தாள்
கோயில் மணி தீபம் என்று பிள்ளை ஒன்று ஈன்றெடுத்தாள்
மனையாளின் சுகம்யாவும் தாங்கிடுவான்
ஓஹ்ஹோஓஓ……
அவள் கன நேரம் பிரிந்தாலும் ஏங்கிடுவான்
ஓஹ்ஹோஓஓ………
உப்புக் கல்லை வைரமாய் ஹோஹோஹ்ஹோஓஓ……
உப்புக் கல்லை வைரமாய் செப்புச் சிலை மாற்றினாள்
நாளெல்லாம் சொர்க்கமே நேரில் வந்து இங்கு தோன்றும்
வேறு என்ன இன்னும் வேண்டும்
அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள் ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா
ஓஹ்ஹோஓஓ………
கூட வரும் நிழல் வேறு எது கொண்டவளை போல இங்கே
இந்த நிழல் இருட்டினிலும் பின் தொடர்ந்து ஓடி வரும்
கன்னி பெண்கள் பல பேர்களுக்கு நல்ல துணை வாய்ப்பதில்லை
அந்த குறை எனக்கு இல்லை மாமன் மனம் அன்பின் எல்லை
ஒரு தாயை இழந்தாலும் வாழ்க்கையிலே
ஓஹோஹோஹ்ஹோஓஓ……
இன்று மறு தாயோ மனயாளின் உருவத்திலே
ஓஹோஹோஹ்ஹோஓஓ……
துன்பம் என்ற வார்த்தையே ஹோஹோஹ்ஹோஓஓ……
துன்பம் என்ற வார்த்தையே என்றும் இல்லை வாழ்விலே
நாளெல்லாம் சொர்க்கமே நேரில் வந்து இங்கு தோன்றும்
வேறு என்ன இன்னும் வேண்டும்
அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள் ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா
ஓஹ்ஹோஓஓ………
Movie: Ellame En Rasathan
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja
0 Comments