Veesum Kaatrukku Song Lyrics in Tamil
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா..?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா..?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்..!
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்..!
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா..?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா..?
என்னையே திறந்தவள் யாரவளோ..?
உயிரிலே நுழைந்தவள் யாரவளோ..?
வழியை மறித்தாள்.. மலரைக் கொடுத்தாள்..
மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்..
மேகமே மேகமே அருகினில் வா..
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா..
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா..?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா..?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்..!
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்..!
சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்..
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்…
விழிகள் முழுதும்.. நிழலா இருளா..
வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா..
சருகென உதிர்கிறேன் தனிமையிலே..
மௌனமாய் எரிகிறேன் காதலிலே..
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா..?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா..?
மேகம் போலே என் வானில் வந்தவளே..
யாரோ அவள்.. நீதான் என்னவளே..
மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே..
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே..
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா..?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா..?
Movie: Ullasam
Lyrics: Palani Barathi
Music: Karthik Raja
0 Comments