Udhiraa kaayangal Song Lyrics in Tamil - நீங்க முடியுமா நினைவு தூங்குமா

Udhiraa Kaayangal Song Lyrics in Tamil

Lyricist Vivek


உதிரா காயங்கள்
உலரா ஈரங்கள் மனதின்
ஆழத்தில் எரியும் ஓரங்கள்

மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்

வெள்ளை காகிதம்
ஆகிறேன் தூயவரி எழுதும்
மரணமே பழிகள் மீறியே
சிறிதாய் மீள்கிறேன் அணையும்
வேளையில் ஒளியாய் நீள்கிறேன்

மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்

அந்த காலனின்
வாசனை நான் நுகரும்
கவிதை நிமிடமே ஓர்
தூயனாய் என் சாவை
ஆள்கிறேன்

ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம் ம்ம்ம் உதிரா காயங்கள்
உலரா ஈரங்கள் மனதின்
ஆழத்தில் எரியும் ஓரங்கள்

மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்..

Movie: Dhuruvangal Pathinaaru
Lyrics: Vivek
Music: Jakes Bejoy

Post a Comment

0 Comments