Theertha Karaiyinile Song Lyrics in Tamil
தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதட பாவை தெரியுதடி
தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே
தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி பாவை தெரியுதடி
மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ
தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில்...
Movie: Varumayin Niram Sivappu
Lyrics: Subramania Bharati
Music: M. S. Viswanathan
0 Comments