Kalli Kaatil Pirantha Thaye Song Lyrics in Tamil
கள்ளி காட்டில்
பிறந்த தாயே என்ன கல்
ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச
தாயே என்ன முள்ளு தைக்க
விடல நீயே
காடைக்கும்
காட்டு குருவிக்கும்
எந்த புதருக்குள் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும்
குளிருக்கும் தாயி
ஒதுங்கதான் இடமுண்டா
ஆ
கரட்டு மேட்டயே
மாத்துன அவ கள்ளபுழிஞ்சி
கஞ்சி ஊத்துன கரட்டு
மேட்டயே மாத்துன அவ
கள்ளபுழிஞ்சி கஞ்சி ஊத்துன
கள்ளி காட்டில்
பிறந்த தாயே என்ன கல்
ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச
தாயே என்ன முள்ளு தைக்க
விடல நீயே
உளவு காட்டுல
வித வெதப்ப ஓணான்
கரட்டுல கூழ் குடிப்ப
அவாரன் குழையில கை
துடைப்ப பாவமப்பா
ஓஹோ ஓஹோ
வேலி முள்ளில்
அவ விறகெடுப்பா நாழி
அரிசி வச்சு உலையரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு
உசுர் வளர்ப்பா தியாகமப்பா
கிழக்கு விடியும்
முன்ன முளிக்குறா அவ
உலக்க பிடிச்சுதான்
திறக்குறா மண்ண கிண்டிதான்
பொழைக்கிறா உடல் மக்கிப்போக
மட்டும் உழைக்குறா
கள்ளி காட்டில்
பிறந்த தாயே என்ன கல்
ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச
தாயே என்ன முள்ளு தைக்க
விடல நீயே
தங்கம் தனி
தங்கம் மாசு இல்ல
தாய்ப்பால் ஒன்னில்
மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம்
போல பாசமில்ல
நேசமில்ல ஓ ஹோ
ஆறு இல்லா
ஊரில் கிணறு இருக்கு
கோவில் இல்லா ஊரில்
தாயி இருக்கு தாய் இல்லா
ஊரில் நிழல் இருக்க
அன்பில் நேசம் இருக்கா
சொந்தம் நூறு
சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு
நிலைக்குதா சாமி நூறு சாமி
இருக்குது அட தாயி ரெண்டு
தாயி இருக்குதா
கள்ளி காட்டில்
பிறந்த தாயே என்ன கல்
ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச
தாயே என்ன முள்ளு தைக்க
விடல நீயே..
Movie: Thenmerku Paruvakaatru
Lyrics: Vairamuthu
Music: N. R. Raghunanthan
0 Comments