Lyricist Mohan Rajan

ஜில்லா விட்டு ஜில்லா வந்த பாடல் வரிகள்

வந்தனமா வந்தனமா எல்லோர்க்கும் வந்தனம்
மணம் மணமா சந்தனம்
சந்தனத்த பூசிக்கிட்டு சந்தோசமா கேட்க்கனும்

கலகலப்பா ஆடனும் கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும் கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா நான் தூத்துக்குடி பொண்ணய்யா

துாத்துக்குடி பொண்ணய்யா என் கதையை கேளய்யா
சொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாரய்யா

அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம் எட்டாவதா என்ன பெத்த
என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல

அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம் எட்டாவதா என்ன பெத்த
என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல சொக்கனும் அதை சொல்லல

வளர்ந்து நிக்கிற தென்னையா வக்கனையா நான் நின்னேன்
வக்கனையா நான் நின்னேன்

ஏழையும் கரை சேர்ந்ததால ஏழரையாய் நான் ஆனேன்
ஏழரையாய் நான் ஆனேன்

அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள

வலையப் போல என்னக்கட்டி போனானய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பள அவன் துப்பில்லாத ஆம்பள

அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள வலையப் போல என்னக்கட்டி
போனானய்யா மாப்பிள்ளை

அஞ்சான் நாளு மூட்டுவலியில் மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்

ஒன்னு போனா ஒன்னு வந்து வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான் என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

அஞ்சான் நாளு மூட்டுவலியில் மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான் ஒன்னு போனா ஒன்னு வந்து
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்

காய்ச்சலுக்கு காடு வித்தேன் இருமலுக்கு நெலம் வித்தேன்
வித்ததெல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன்
மிச்சமாக நான் நின்னேன் அட மிச்சமாக நான் நின்னேன்

ஊரிலுள்ள மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சு
இளம் மனச கெடுத்துச்சு உசுர விட மானம் பெருசு
புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு வயிறு எங்கே கேட்டுச்சு

ஒரு சானு வயிதுக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன் என் கதைய முடிக்கிறேன்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீ கேட்டியா
என் கதைய நீயும் கேட்டியா
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீ கேட்டியா
என் கதைய கேட்டியா

கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா

விசிலு ராகம் பாடய்யா விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா விசிலு ராகம் பாடய்யா…

Movie: Eesan
Lyrics: Mohan Rajan
Music: James Vasanthan