Hey Rasathi Rosapoo Song Lyrics in Tamil
ஹே ராசாத்தி ராசாத்தி ராசாத்தி..
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி..
ஹே.. ராசாத்தி ரோசா பூ வா வா வா..
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா..
தேவதையே...
திருமகளே...
தேவதையே திருமகளே..
மாங்கனியே மணமகளே..
மாலை சூடும் குணமகளே..
ஹே.. ராசாத்தி ரோசா பூ வா வா வா..
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா..
கண்கள் இமை மூடும் போதும்..
உனதன்பு எனதன்பை தேடும்..
அடடடா...
மஞ்சம் இரண்டான போதும்..
நம் எண்ணம் ஒன்றாக தூங்கும்..
அடடடா...
தூர இருந்தும், அருகில் இருப்போம்..
ஆஹா....
தனித்து இருந்தும், இணைந்தே இருப்போம்..
ஆகாயம் பூ பந்தல் அங்கே பொன் ஊஞ்சல்..
நீ ஆட அதில் நான் ஆட நேரம் வந்தாடா..
ஆகாயம் பூ பந்தல் அங்கே பொன் ஊஞ்சல்..
நீ ஆட அதில் நான் ஆட நேரம் வந்தாடா..
மின்னும் வெள்ளி மீன்களை மேனி எங்கும் சூடுவேன்..
மேடை என்னும் தேவியை ஆடை என்று மூடுவேன்..
அங்கம் எங்கும் தங்கம்..
ஹே எங்கும் இன்பம் பொங்கும்...
ஹே.. ராசாத்தி ரோசா பூ வா வா வா..
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா..
தேவதையே...
திருமகளே...
தேவதையே திருமகளே..
மாங்கனியே மணமகளே..
மாலை சூடும் குணமகளே..
பந்தல் இட்டு பரிசம் போட்டு;
சொந்தம் கூடி நாள் குறிக்க..
பந்தல் இட்டு பரிசம் போட்டு;
சொந்தம் கூடி நாள் குறிக்க..
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து..
அழகான மங்கைக்கு மாலை அணிந்து..
மங்கல வாந்தியம் மந்திரம் முழங்க..
மங்கல கயிறு மணி கழுத்தில் ஏரிடும் அந்நாள்...
வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதல் இரவு..
தேன் மொழியில் இசை தான் கலந்து
படிப்போம் சேர்ந்திருந்து..
வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதல் இரவு..
தேன் மொழியில் இசை தான் கலந்து
படிப்போம் சேர்ந்திருந்து..
வானும் இந்த பூமியும்
நானும் தந்தேன் சீதனம்..
கையில் வந்த பூவுடல்
காதல் மலர் பூவனம்..
கண்ணே காதல் பெண்ணே..
காமன் கோவில் வாசல் முன்னே..
ஹே.. ராசாத்தி ரோசா பூ வா வா வா..
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா..
தேவதையே...
திருமகளே....
தேவதையே திருமகளே..
மாங்கனியே மணமகளே..
மாலை சூடும் குணமகளே..
ஹே.. ராசாத்தி ரோசா பூ வா வா வா..
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா...
Movie: En Uyir Thozhan
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja
0 Comments