Ennanga Sir Unga Sattam Song Lyrics in Tamil
ஏய்..... ஏய்.....
என்னங்க சாரே என்னங்க சாரே
ஏய் ஏய்
என்னங்க சார்உங்க சட்டம்
என்னங்கசார் உங்க திட்டம்
கேள்வி கேட்க ஆளில்லாம
போடுறீங்க கொட்டம்
நூறுகோடி மனிதரே
யாரு யாரோ தலைவரே
ஓட்டு வாங்கி போற நீங்க
ஊழல் ஓட டீலரே
ஓட்டு வாங்கி போற
நீங்க ஊழல் ஓட டீலரே
ஏய் ஏய்
ஆண்ட பரம்பரை கைநாட்டு
ஆட்டிப் படைக்குது கார்ப்ரேட்டு
நாட்ட விக்கிற மந்திரிமாருக்கு
நல்லா வையி சல்யூட்டு
ப ப ப பா பபா பபா பா பா
ப ப ப பா ப ப ப பா
பபா பபா பா பா
பபா பபா பா பா
பபா பபா பபா
ப ப ப ப ப ப
ஏய் ஏய்
ரேசன் அரிசி புழுவுல
வல்லரசு கனவுல தேசம்
போற போக்கப்பாா்த்தா
தேறாதுங்க முடிவுல
ஏய் ஏய்
கருத்துச் சொல்ல முடியல
கருப்புப் பணமும் திரும்பல
ஆளுக்காளு நாட்டாமைதான்
பார்லிமெண்ட்டு நடுவுல
சொகுசு காரு தெருவுல ஏய்
விவசாயி தூக்குல ஏய்
வட்டி மேல வட்டி போட்டுஅடிக்கிறீங்க வயித்துல
என்னங்க சார் உங்க சட்டம்
என்னங்க சார் உங்க திட்டம்
என்னங்க சார்
ஏய் ஏய் ஏய் ஏய்
ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்
ஏய் ஏய் ஏய்
கையில போனு ஜொலிக்குதா
டிவியும் ஓசியில் கிடைக்குதா
அவசரமா ஒன்னுக்கும் ரெண்டுக்கும்
ஒதுங்க இடமும் இருக்குதா
ஏய் ஏய்
இயற்கை என்ன மறுக்குதா
எதையும் உள்ள பதுக்குதா
எல்லாத்தையும்சூறையாட சர்க்கார் கூட்டி கொடுக்குதா
நல்ல தண்ணி கிடைக்கல ஏய்
நல்ல காத்து கிடைக்கல ஏய்
அரசாங்க சரக்குலதான் கொல்லுறீங்க ஜனங்கள
என்னங்க சார் உங்க சட்டம்
என்னங்க சார் உங்க திட்டம்
கேள்வி கேட்க ஆளில்லாம
போடுறீங்க கொட்டம்
நூறுகோடி மனிதரே
யாரு யாரோ தலைவரே
ஓட்டு வாங்கி போற நீங்க
ஊழல் ஓட டீலரே
ஓட்டு வாங்கி போற
நீங்க ஊழல் ஓட டீலரே
ஏய் ஏய்...
Movie: Joker
Lyrics: Yugabharathi
Music: Sean Roldan
0 Comments