Anbulla Appa Appa Song Lyrics in Tamil
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன் போல் இல்லை மண்மேலே

அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கெது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீதானே உண்மையிலே
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன் போல் இல்லை மண்மேலே
மாதக்கணக்கில் தாயும் சுமந்து வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து காத்து நிக்கும் உனக்கில்லை நிகரே
தூசி எனை தொடவும் விடமாட்டாய்
தோளில் எனை சுமந்தே நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன் போல் இல்லை மண்மேலே
அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
தோழன் என நீ தோளும் கொடுத்து தோல்விகளை ஜெயித்திட வருவாய்
சோகம் எதையும் உன்னுள் மறைத்து புன்னகையை எனக்கென தருவாய்
கண்ணிமையில் எனை நீ அடைகாத்து
தூங்கிடவும் மறப்பாய் எனை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன் போல் இல்லை மண்மேலே
அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கெது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீதானே உண்மையிலே...
Movie: Sigaram Thodu
Lyrics: Yugabharathi
Music: D. Imman
0 Comments