Aayiram Jannal Veedu Song Lyrics in Tamil - ஆயிரம் ஜன்னல் வீடு

Aayiram Jannal Veedu Song Lyrics in Tamil

Lyricist Na. Muthukumar

ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு

அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மன போலவே
எங்க அப்பத்தாவப் பாருங்க

ஏய் சுத்துறான் சுத்துறான்
காதுலதான் சுத்துறான்
வீசுறான் வீசுறான்
வலையத்தானே வீசுறான்

பாசமான புலிங்க கூட
பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில்
படிக்கட்டா மாறலாம்

ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு

வீரபாண்டித் தேரப் போல
இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு
இவங்களப் போல் யாரு

சித்தப்பாவின் மீசையப் பார்த்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் கொழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்

கோழி வெரட்ட வைரக்கம்மல்
கழட்டித்தானே எறிவாங்க
திருட்டுப்பயல புடுச்சுக் கட்ட
கழுத்துச் செயின அவுப்பாங்க

காட்டுறான் காட்டுறான்
கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான்
வாய ரொம்ப நீட்டுறான்

சொந்த பந்தம் கூட இருந்தா
நெருப்புல நடக்கலாம்
வேலு அண்ணன் மனசுவச்சா
நெருப்பயே தாண்டலாம்

ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு

சொக்கம்பட்டி ஊருக்குள்ள
ஒடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள அயிரமீனும்
சொல்லுது உன் பேரு

சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி
நாட்டாமதான் யாரு யாரு
பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும்
தாத்தாவோட பேரு

வாசக்கதவு தொரந்தே இருக்கும்
வந்த சொந்தம் திரும்பாது
வேட்டையாடப் போனா ஐயா
நூறு சிங்கம் புடிப்பாரு

ஐயோ வைக்கிறான் வைக்கிறான்
ஐசத்தூக்கி வைக்கிறான்
கத்துறான் கத்துறான் காரியமா கத்துறான்

ஈரமுள்ள இதயம் இருந்தால்
ஈட்டியத்தான் தாங்கலாம்
வேலு அண்ணன் மனசவச்சா
இந்த வீட்டில் தங்கலாம்

ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு

அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மன போலவே
எங்க அப்பத்தாவப் பாருங்க

கவுத்துட்டான் கவுத்துட்டான்
குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டான் போட்டுட்டான்
டேராவத்தான் போட்டுட்டான்

பாசமான புலிங்க கூட
பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில்
படிக்கட்டா மாறலாம்...

Movie: Vel
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja

Post a Comment

0 Comments