Aaha Kaadhal Konji Song Lyrics in Tamil
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி
பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே
வினா தாளில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி
பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
நதியில் விழும் இலை இந்த காதலா
கரையை தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா எழுந்திடுவேனா
எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா
உன்னை பார்ப்பதை நான் அறியேன்
உன்னை பார்கிறேன் வேரறியேன்
என்னுடன் நீயா உன்னுடன் நானா
நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி
பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா
கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசை அரியாது திரும்பிடுவேனா
காதலின் பொன் ஊஞ்சலில்
அசைவது சுகம் சுகம்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி
பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
ஒரே பெயரை
உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில்
என் பெயர் சேர்கின்றதே
வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா
ஆஹா காதல்
ஆளை மிரட்டி ..
Movie: Moondru Per Moondru Kadhal
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja
0 Comments