Azhaikiran Madhavan Song Lyrics in Tamil
அழைக்கிறான் மாதவன், ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும், மயில் இறகும்
எதிர் வரவும், துதி புரிந்தேன்
மாதவா, கேசவா, ஸ்ரீதரா ஓம்..
தேடினேன் தேவதேவா, தாமரைப் பாதமே..
வாடினேன் வாசுதேவா, வந்தது நேரமே..
ஞான வாசல் நாடினேன்!
வேத கானம் பாடினேன்!
கால காலம் நானுனை!
தேடினேன் தேவதேவா, தாமரைப் பாதமே..
காதில் நான் கேட்டது வேணு கானாம்ருதம்..
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்..
மாயனே நேயனே மாசில்லாத தூயனே!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்..
தேடினேன் தேவதேவா, தாமரைப் பாதமே..
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!
ஞானத் திருமேனி காண வர வேண்டுமே!
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே!
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்?
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்?
தாயாகித் தயை செய்யும் தேவா!
தடை நீங்க அருள் செய்ய வாவா!
நான் செய்த பாவம், யார் தீர்க்கக் கூடும்?
நீ வாழும் இடம்வந்து, நான் சேர வேண்டும்!
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா..
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா..
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திர ராகவேந்திர ராகவா! - குரு
ராகவேந்திர ராகவேந்திர ராகவா!
ராகவா! ராகவா! ராகவா! ராகவா..
Movie: Sri Raghavendra
Lyrics: Vaali
Music: Ilayaraja
0 Comments