Yaar Initha Muyal Kutty Song Lyrics in Tamil
உன் பேர் என்ன முயல் குட்டி..
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி..
வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய்
யார் இந்த முயல் குட்டி
உன் பெயர் என்ன முயல் குட்டி..
தீயில் எரியும் மூங்கில் காட்டில்
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்
பர பரப்பான போக்குவரத்தில்
பல்லூனை தொலைத்த பச்சை பிள்ளையாய்
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி..
அழகை நீட்டி ஆளை இழுத்தாய்
அச்சத்தாலே ஆசீர்வதித்தாய்
பார்த்த பார்வையில் பச்சை குத்தினாய்
பயந்த விழியினால் பைத்தியம் செய்தாய்..
உந்தன் பின்னால் நான் வருவேனோ
எந்தன் பின்னால் நீ வருவாயோ
சாலை கடக்க முடியும் உன்னால்
உன்னை கடக்க முடியாது என்னால்
முடியாது என்னால்..
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி..
ஒரு கை காட்டி என்னை அழைத்தாள்
இரு கை நீட்டி ஏந்தி கொள்வேன்
பெண்ணே நீயும் சாலை கடந்தால்
பிறவி பெருங்கடல் நானும் கடப்பேன்
சாலை கடந்தால் மறப்பாயோ
சாகும் வரையில் மறப்பேனோ
சாலை கடக்க முடியும் உன்னால்
உன்னை கடக்க முடியாது என்னால்
முடியாது என்னால்..
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி..
வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய்..
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி..
தீயில் எரியும் மூங்கில் காட்டில்
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்
பர பரப்பான போக்குவரத்தில்
பல்லூனை தொலைத்த பச்சை பிள்ளையாய்
யார் இந்த முயல் குட்டி..
Movie: Paayum Puli
Lyrics: Vairamuthu
Music: D. Imman
0 Comments