Adiye Azhage Song Lyrics in Tamil
அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வழியே வழியே என் ஒளியே ஒளியே
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஓடாத
காத்தோட நீ எரிச்ச வார்த்தை வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற
அடியே அழயே என் அழயே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வழியே வழியே என் ஒளியே ஒளியே
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஓடாத
போன போற தான வருவா மெதப்புல திரிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணா போச்சு பொசுக்குன்னு ஒடஞ்சேன்
உன் சுக பார்வை ஒரசுது மேல
சிரிக்கிற ஓசை சரிக்குது ஆள
தீ தூவி தீ தூவி போன
அவ வேணும் நானும் வாழ..
ஏனோ உன்ன பாத்தா உள்ள சுருக்குனு வருது
ஆனா கிட்ட நீயா வந்த மனசிங்கு விழுது
எதுக்கிந்த கோபம் நடிச்சது போதும்
மறச்சு நீ பாத்தும் வெளுக்குது சாயம் ...
அட நேத்தே நான் தோத்தேன்
அட இதுதானா உன் வேகம் ..
அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வழியே வழியே என் ஒளியே ஒளியே
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஓடாத
காத்தோட நீ எரிச்ச வார்த்தை வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற
அடியே அழகே..
Movie: Oru Naal Koothu
Lyrics: Vivek
Music: Justin Prabhakaran
0 Comments