Lyricist Madhan Karky

பச்சைத் தீ நீயடா பாடல் வரிகள்

பச்சைத் தீ நீயடா இச்சைப் பூ நானடா
ஒற்றைப் பார்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா

வெற்றுக் கல் நானடா வெட்டும் உளி நீயடா
அற்பப் பாறை என்னில் சிற்பம் செய்தாயடா

நீயே மண் மின்னும் வெண்தாரகை
உள்ளங்கை சேர்ந்தப் பூங்காரிகை
கைகள் நாம் கோர்க்கச் சிறகாகுமே
புது வானங்கள் உருவாகுமே

மான் விழிக்குள் எந்தன்
வாழ்வொன்றைக் காண
மாமலை ஒன்றேறி வந்தேனடி

இதயம் ஒன்று உள்ளதென்று
உன் அணைப்பாலே கண்டேனே
இனும் எனை இறுக்கியே
அணைத்திடத் துடித்தேனே

நீயே மண் மின்னும் வெண்தாரகை
தோளில் வீழ்கின்ற பூங்காரிகை
உந்தன் தோளோடு தோள் சேர்க்கிறேன்
என்னில் தோகைகள் நான் பார்க்கிறேன்

கீறலில் உண்டாகும் கீதங்கள் கேட்டாய்
மோதலின் மோகங்கள் கேட்டாயடி

பிறவி பல எடுத்தாலும் நிகழும் கணம் நான் மறவேனே
வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே

நீயே மண் மின்னும் வெண்தாரகை
கண்ணில் தேன் சிந்தும் பூங்காரிகை
உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்
காதல் ஆழத்தை நான் காண்கிறேன்

பச்சைத் தீ நீயடா இச்சைப் பூ நானடா
ஒற்றைப் பார்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா…

Movie: Baahubali
Lyrics: Madhan Karky
Music: Keeravani