Mundhinam Parthene Song Lyrics in Tamil - முன்தினம் பார்த்தேனே

Mundhinam Parthene Song Lyrics in Tamil

தாமரை

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ?
நாட்களும் வீணானதே...

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன?
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன?
இப்போதே என்னோடு வந்தால் என்ன?
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...?

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ?
நாட்களும் வீணானதே...

துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே!

ஓ.. நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வீணான ஒரு கனவு நூறு விடை சொல்லடி

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
உள்ளமும் புண்ணானதே

கடல் நீரும் பொங்கும் நேரம்
அலைவந்து தீண்டும் தூரம்
மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே..

தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்...? தூரத்திலே!

பகல் நேரம் கனாக்கள் கண்டேன்! உறங்காமலே...
உயிர் இரண்டும் உராயக்கண்டேன்! நெருங்காமலே...
உனையன்றி எனக்கு ஏது..? எதிர்காலமே...

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
உள்ளமும் புண்ணானதே
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ?
நாட்களும் வீணானதே...

வெண்ணிலா...வெண்ணிலா... வெண்ணிலா...
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவோனோ... ஆருயிரே...

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
உள்ளமும் புண்ணானதே
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ?
நாட்களும் வீணானதே...
Movie: Vaaranam Aayiram
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj

Post a Comment

0 Comments