Kurumba Song Lyrics in Tamil
குறும்பா..
குறும்பா..
குறும்பா..!
உயரம் குறைந்தேன் உன்னால்!
மணலில் வரைந்தேன் உன்னால்!
கடலில் கரைந்தேன் உன்னாலே..!
சிறகாய் விரிந்தேன் உன்னால்!
தரையில் பறந்தேன் உன்னால்!
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே..!
ஒற்றை க்ரயான் ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம்
உருளைச் சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம்
நொறுக்கிடுவோம்..!
குறும்பா என் உலகே நீதான் டா!
குறும்பா என் உயிரே நீதான் டா!
குறும்பா என் உலகே நீதான் டா!
குறும்பா என் உயிரே நீதான் டா!
விண்வெளி மீன்களில் எல்லாம் உன் விழி தானே பார்ப்பேன்,
வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்..!
வெற்றிகள் ஆயிரம் வந்தால் புன்னகையோடே ஏற்பேன்,
உன்னிடம் மட்டும் தானே தோற்பேன்..!
ஆட்டம் போடும்போதெல்லாம், உலகே அழகாய் மாறும்..
வீட்டுப்பாடம் செய்தாலோ, இரத்த அழுத்தம் ஏறும்!
உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய் எனக்கு தெரியாதா...!?
குறும்பா என் உலகே நீதான் டா!
குறும்பா என் உயிரே நீதான் டா!
குறும்பா என் உலகே நீதான் டா!
குறும்பா என் உயிரே நீதான் டா!
உளறல் மொழிகள் உன்னால்!
கார்ட்டூன் கனவும் உன்னால்!
கிறுக்காய் ஆனேன் உன்னாலே..!
எறும்போடெறும்பாய் சில நாள்!
பூனை நாயாய் சில நாள்!
மனிதன் ஆனேன் உன்னாலே..!
விந்தை என்று கையில் வந்தாயே, என் மனம் குளிர!
தந்தை என்று பட்டம் தந்தாயே, நான் தலை நிமிர! தலை நிமிர..!
குறும்பா என் உலகே நீதான் டா!
குறும்பா என் உயிரே நீதான் டா!
குறும்பா என் உலகே நீதான் டா!
குறும்பா என் உயிரே நீதான் டா!
குறும்பா..
குறும்பா..
குறும்பா..!
Movie: Tik Tik Tik
Lyrics: Madhan Karky
Music: D. Imman
Lyrics: Madhan Karky
Music: D. Imman
0 Comments