Lyricist Vairamuthu

ரவிவர்மன் எழுதாத கலையோ பாடல் வரிகள்

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..
கவிராஜன் எழுதாத கவியோ..
கரைபோட்டு நடக்காத நதியோ..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..

விழியோர சிறுபார்வை போதும்
நான் விளையாடும் மைதானமாகும்..
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாறும் மலர்ப்பந்தலாகும்..
கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே..
கரும் கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..

பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்..
மகராணி போல் உன்னை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்..
என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும்..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..
கவிராஜன் எழுதாத கவியோ..
கரைபோட்டு நடக்காத நதியோ..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..

Movie: Vasanthi
Lyrics:  Vairamuthu
Music: Chandrabose