பதான் சென்சார் போர்டு ரிப்போர்ட் கசிந்தது, தீபிகா படுகோனின் பிகினி நிறம் குறித்து குறிப்பிடவில்லை

ஷாருக்கானின் பதான் திரைப்படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் பல வசனங்கள் மற்றும் ஷாட் மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது.

மும்பை

டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி உள்ள பதான் திரைப்படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது.

இதில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல் ஆபாசத்தின் உச்சம் என மிகப்பெரிய சர்ச்சைகள் கிளம்பின. இந்த பாடல் பல கோடி பார்வைகள் கடந்து யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. அந்த பாடலில் ஏகப்பட்ட பிகினி உடைகளில் ஒட்டுமொத்த கட்டழகும் பளிச்சென தெரியும் படி தீபிகா படுகோன் படு ஆபாசமாக போஸ் கொடுத்திருப்பது ஆபாசத்தின் உச்சம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாஜகவினர் மற்றும் இந்து மத அமைப்பினர் இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஷாருக்கான் நடித்த பதான் படத்தில் சர்ச்சைக்குரிய பாடல் காட்சி காரணமாக தணிக்கை துறை படத்தில் மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. பாடல் காட்சிகள் உட்பட சில மாற்றங்களைச் செய்து மீண்டும் சான்றிதழுக்காகச் சமர்ப்பிக்குமாறு திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி பதான் படத்தின் தயாரிப்பாளர்களைக் கேட்டுக்கொண்டு இருந்தார்.

ஷாருக்கானின் பதான் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) 10க்கும் மேற்பட்ட வெட்டுக்களைப் பெற்று உள்ளது.

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) வசனங்கள் இருந்து காட்சிகள் வரை பல மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. ஆனால் தீபிகா படுகோனின் பேஷராம் ரங்கில் சர்ச்சைக்குரிய பிகினி நிறம் எதுவும் குறித்து குறிப்பிடப்படவில்லை.

பாடலில் வரும் குளோஸ் அப் காட்சிகள், சைடு போஸ் (பகுதி நிர்வாணம்)’ காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான நடன அசைவுகளின் காட்சிகள் மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

வசனத்தில் ஸ்காட்ச் என்ற வார்த்தை மாற்றப்பட வேண்டும், அதே நேரத்தில் ‘கருப்பு சிறை, ரஷியா’ என்ற வார்த்தை மாற்ற வேண்டும். அது தவிர, பிரதமருக்கு பதிலாக ஜனாதிபதி அல்லது அமைச்சர் என மாற்றப்பட வேண்டும், மேலும் 13 இடங்களில் பிஎம்ஓ என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என கூறி இருந்தது.