சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் கஜோல் மகள்...!

சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் கஜோல் மகள் காட்டுத் தீ போல் பரவும் கவர்ச்சி படங்கள்.

மும்பை

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல்.பாலிவுட், சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான் என பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்த காஜல், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு நைசா என்கிற மகளும், யுக் என்கிற மகனும் உள்ளனர்.

இவர் தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மின்சார கனவு படத்தில் நடித்துள்ளார். வேலை இல்லா பட்டதாரி -2 படத்திலும் நடித்து உள்ளார்.

கஜோல் நடிப்பில் அண்மையில் சலாம் வெங்கி என்கிற திரைப்படம் வெளியானது. இப்படத்தை நடிகை ரேவதி இயக்கி இருந்தார். அதேபோல் அஜய் தேவ்கனும் தற்போது போலா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கைதி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தை அவரே இயக்கியும் வருகிறார்.

இப்படி கஜோலும், அஜய் தேவ்கனும் பாலிவுட்டை கலக்கி வரும் நிலையில், விரைவில் அவரது மகளும் பாலிவுட்டில் நடிகையாக வலம் வருவார் என்கிற பேச்சு அடிபட தொடங்கி உள்ளது. இதற்கு காரணம் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் தான்.

நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய நைசா அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இது கஜோல் மகளா என கேட்கும் அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இவர் மட்டும் பாலிவுட்டில் அறிமுகமானால் சன்னி லியோனுக்கே டப் கொடுப்பார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.