ஏதாவது தெரியுதா...!  என்னை கைது செய்ய முடியாது...! உர்பி ஜாவித் சவால்

அரசியல்வாதிகளுக்கு எதிராக பேசுவது ‘ஆபத்தானது’ என்று தனக்குத் தெரியும், ஆனால் இதுபோன்ற புகார்கள் தன்னை ‘தற்கொலை உணர்வை’ ஏற்படுத்துகின்றன என்று கூறினார்.

மும்பை

மும்பை ‘பிக் பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அவருடைய தனித்துவமான ஆடைகள் பெரும்பாலும் ஆச்சரியப்படவைக்கும்.

கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள் அல்லது பூ இதழ்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து தனது உடலை மறைத்து புகைப்படங்களாக வெளியிடுவார்.

இந்த நிலையில் பொது இடங்களிலும் சமூக ஊடகங்களிலும் சட்டவிரோதமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகசமூக ஊடக செல்வாக்கு மிக்க உர்பி ஜாவேத் மீது எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மும்பை தெருக்களில் உர்பி ஜாவேத் நிர்வாணமாக திரிகிறார் என உர்பி ஜாவேத்தின் ஆடையை பாஜக மகிளா மோர்ச்சா தலைவர் சித்ரா வாக் விமர்சித்தார்.

“மும்பையில் என்ன நடக்கிறது? மும்பை தெருக்களில் வெளிப்படையாக நிர்வாணத்தில் ஈடுபடும் இந்த பெண்ணைத் தடுக்க மும்பை காவல்துறைக்கு ஏதேனும் ஐபிசி/சிஆர்பிசி பிரிவுகள் உள்ளதா? விரைவில் கைது செய்யுங்கள்” என்று டுவீட் செய்திருந்தார்.

மேலும் “ஒருபுறம், அப்பாவி பெண்கள்/பெண்கள் வக்கிரங்களுக்கு இரையாகிக்கொண்டிருக்கிறார்கள், மறுபுறம், இந்தப் பெண் மேலும் வக்கிரத்தைப் பரப்புகிறார்” என்று கூறினார்.

ஆனால் அந்த விமர்சனத்திற்கு நடிகர் நடிகை பதில் அளித்துள்ளார். அவர் கூறி உள்ளதாவது:-

உங்கள் கட்சியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது அவ்வப்போது மானபங்க

புகார்கள் வருகின்றன. அந்த பாதிக்கபட்ட பெண்களுக்காக நீங்கள் எதையும் செய்து நான் பார்த்ததில்லை. நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் உங்கள் சொத்துக்கள் வெளியிட்டால் நான் இப்போதே சிறைக்கு செல்ல தயார். எனக்கு விசாரணை கூட தேவையில்லை.

ஒரு அரசியல்வாதி எங்கிருந்து எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை உலகுக்குத் தெரியப்படுத்துங்கள். ஆபாசம் மற்றும் நிர்வாணத்தின் வரையறை தனிநபர்களிடமே உள்ளது. எனது படங்களில் அந்தரங்க பாகங்களை காட்டவில்லை இதனால் என்னை சிறைக்கு அனுப்ப முடியாது. இப்படிப்பட்டவர்கள் மீடியா கவனத்திற்காக மட்டுமே இதைச் செய்கிறார்கள் என கூறினார்.

மற்றொரு பதிவில் அரசியல்வாதிகளுக்கு எதிராக பேசுவது ‘ஆபத்தானது’ என்று தனக்குத் தெரியும், ஆனால் இதுபோன்ற புகார்கள் தன்னை ‘தற்கொலை உணர்வை’ ஏற்படுத்துகின்றன என்று கூறினார்.

இந்த நிலையில் ஒரு வீடியோவை வெளியிட்ட வாக், உர்பியை கடுமையாக சாடினார், மராட்டிய கலாச்சாரம் இதுபோன்ற மோசமான செயல்களை அனுமதிக்காது என்றும், நடிகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையத்தை கேட்டுக் கொண்டார்.

ஒன்பது வயது மகள் சில கொடூரமான சோதனைகளைச் சந்தித்த ஒரு தாய், தன்னை அணுகி உர்பி ஜாவேத்துக்கு எதிராகக் குரல் எழுப்பச் சொன்னார் என்று கூறினார்.