ஹாலிவுட் இயக்குனர் படத்தில் நடிகர் யாஷ்?

‘டே ஷிப்ட்’, ‘தி கில்லர்ஸ் கேம்’ போன்ற ஹாலிவுட் படங்களை டைரக்டு செய்த ஜே.ஜே.பெர்ரியை, நடிகர் யாஷ் லண்டனில் சந்தித்து பேசியுள்ளார். இருவரும் புதிய படத்தில் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘கே.ஜி.எப்.’ படத்தில் கதாநாயகனாக நடித்து பான் இந்திய நடிகராக உயர்ந்தவர் யாஷ். கே.ஜி.எப்.படத்தின் 2-ம் பாகமும் கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது.

இந்த படத்தை தொடர்ந்து யாஷ் அடுத்து நடிக்க போகும் படம் எது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ‘டே ஷிப்ட்’, ‘தி கில்லர்ஸ் கேம்’ போன்ற ஹாலிவுட் படங்களை டைரக்டு செய்த ஜே.ஜே.பெர்ரியை, நடிகர் யாஷ் லண்டனில் சந்தித்து பேசியுள்ளார். நீண்ட நேரம் நடந்த இந்த சந்திப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் யாஷ் பதிவு செய்துள்ளார்.

ஜே.ஜே.பெர்ரி இயக்குனர் மட்டுமன்றி பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ‘ஸ்பை’, ‘ஜான் விக்-2’, ‘தி டார்க் டவர்’, ‘பிளட்ஷாட்’, ‘அவதார்-2’ போன்ற பல அதிரடி படங்களுக்கு சண்டை காட்சிகளையும் வடிவமைத்துள்ளார்.

ஏற்கனவே கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், ஜே.ஜே.பெர்ரியுடனான, யாஷின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இருவரும் புதிய படத்தில் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.