வைரலாகும் விஜய், திரிஷா புகைப்படம்

விஜய்யும், திரிஷாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை காஷ்மீர் பகுதிகளில் நடத்தினர்.

லியோ டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஜய் பிறந்த நாளில் அவரது தோற்றத்தையும், நான் ரெடி என்ற பாடலையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

லியோ படத்தை முந்தைய கைதி, விக்ரம் படங்கள் மாதிரி அதிரடி சண்டை படமாக லோகேஷ் கனகராஜ் எடுத்து வருகிறார். இதை நிரூபிக்கும் வகையிலேயே விஜய்யின் ஆவேசமான தோற்றங்கள் அமைந்துள்ளன. பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வில்லனாக வருகிறார்.

இந்த நிலையில் காஷ்மீரில் விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும் பதிவு செய்து உள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

லியோ முழு படப்பிடிப்பும் அடுத்த மாதத்தில் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.