விஷால்-ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படம் - பூஜையுடன் தொடக்கம்

விஷால்-ஹரி கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஹரி. இவரது இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த தாமிரபரணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து விஷால், சுருதிஹாசன் நடிப்பில், ‘பூஜை’ திரைப்படத்தில் ஹரி இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், விஷால்-ஹரி கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில், ‘விஷால்-24’ என்ற பெயரில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது.