விஜய் போட்ட புதிய உத்தரவு - அரசியல் காய் நகர்த்தலா?

விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும், விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தவும், ரசிகர்களின் செயல்பாடுகள் குறித்து அறியவும், தனது இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாடு முழுவதும் நேரடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், தனது இயக்கத்தை அரசியலை நோக்கி விஜய் நகர்த்துகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.